திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி, கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்றப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.மேலும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “திருவண்ணாமலை மாவட்டம் கிராமங்கள் அதிகமாக இருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம். ஏன், விவசாயிகள் நிறைந்திருக்கின்ற மாவட்டம் இந்த மாவட்டம். ஆரணி அரிசி என்றால் அவ்வளவு தரமாக இருக்கும்.
அதனால், மற்ற யாரையும் விட உங்களுக்குத்தான் நூறு நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்று மிகவும் நன்றாக தெரியும். அந்தத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு இப்போது மூடுவிழா நடத்தியிருக்கிறார்கள். வறுமையை ஒழிப்பதிலும், கிராம மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டம் பெரிய சாதனையை படைத்தது. ஆனால், இப்போது பாஜ.க. அந்த திட்டத்தில் காந்தியடிகளின் பேரையும் எடுத்துவிட்டார்கள். 100 நாள் வேலை மக்களின் உரிமை என்று இருந்ததையும் தூக்கிவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக, சிறிது சிறிதாக சிதைத்துவிட்டு வந்த இந்த திட்டத்தை, இப்போது மொத்தமாக நீக்கிவிட்டார்கள். இதை எதிர்த்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாம்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் அவர்கள் கவனிக்கிறார்களா என்றால், இல்லை. தன்னை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, இதை எதிர்த்து குரல் கொடுக்க துணிச்சல் இல்லாமல், ஆதரித்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் கட்சியும், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இப்படியாக, ஒன்றிய பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அ.தி.மு.க. அடிமைகளும் நம்முடைய அரசின் சாதனைகளை மறைக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் திண்டாடுகிறார்கள். அவர்களுடைய எந்த பொய்யையும், மக்களான நீங்கள் நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி, உறுதி, உறுதி என்று நான் தொடர்ந்து உரக்க சொல்கிறேன்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/tvm-mks-speech-2025-12-27-17-14-00.jpg)