Advertisment

“பல விஷயங்கள் இப்போதும் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கின்றன” - முதல்வர் பேச்சு!

avm-saravanan-mks-fun

மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனின் படத்திறப்பு மற்றும் புகழ் வணக்கம் நிகழ்ச்சி சென்னை விருகம்பாக்கத்தில் இன்று (04.01.2026) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ஏ.வி.எம். சரவணனின் உருவப் படத்தை திறந்துவைத்து, மலர்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், “நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது கடற்கரையில் நடைபயிற்சிக்குச் செல்வதுண்டு. அப்போது சரவணனும், அவருடைய நண்பர்களோடு நடைபயிற்சிக்கு வருவார். 

Advertisment

நான் அடிக்கடி அவரை சந்தித்துப் பேசுவதுண்டு. சென்னையெல்லாம் எப்படி இருக்கிறது. எப்படி அதை டெவலப் செய்ய வேண்டும் என்றெல்லாம் அறிவுரைகளை சொல்லியிருக்கிறார். நான் மேயராக பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் 10 பாலங்களை கட்டினேன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் பாலங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நான் நேரடியாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்ததில்லை. தபால் மூலம் அனுப்பி வைத்துவிடுவோம். ஆனால், அதை பார்த்துவிட்டு, நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே அந்த நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து முன் வரிசையில் அமர்ந்திருப்பார். நான் ஆச்சரியப்படுவது உண்டு. 

Advertisment

நான் பல நேரங்களில் அவரை மேடைக்கு அழைப்பதுண்டு. இல்லை. இல்லை நான் அங்கேயே இருக்கிறேன். சென்னை மாநகர மக்களுக்கு இது முக்கியம். அதனால்தான் நான் இதை முக்கியம் என்று கருதி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்று என்னிடத்தில் அடிக்கடி தெரிவிப்பார். அதுமட்டுமல்ல,  நான் மேயராகப் பொறுப்பேற்றிருந்தபோது மாநகராட்சியில் படித்துக்கொண்டிருக்கும் பள்ளி மாணவர்களையெல்லாம் விமானத்தில் திருப்பதி வரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏர் இந்தியா மூலம் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்குக் காரணமே  ஏ.வி.எம். சரவணன் தான். அவரும் என்னுடன் வந்தார். விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது நாங்கள் பேசிக்கொண்டிருந்த பல விஷயங்கள் இப்போதும் என்னுடைய நினைவில் பசுமையாக இருக்கிறது. 

avm-saravanan

முதலிலெல்லாம் கூத்து நிகழ்ச்சிகள் இருந்தன. அதன் பிறகு, நாடகம் வந்ததற்குப் பின் கூத்து மறந்து போய்விட்டது. சினிமா வந்த பிறகு நாடகம் காணாமல் போய்விட்டது. அதுபோல், ஒவ்வொன்றும் அந்தந்த நேரத்தில் வருகின்றபோது அதற்கு தகுந்தாற்போல் நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர இதையெல்லாம் பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சாதாரணமாக சொன்னார். நான் அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கிறேன். காலத்திற்கேற்ற மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டினார். அந்த வகையில் எனக்கு அறிவுரைகள், ஆலோசனைகளையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

2006இல் அவருடைய அஞ்சல் தலையை  கலைஞர் தான் வெளியிட்டிருக்கிறார். அதேபோல், 2023ஆம் ஆண்டு இதே ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஹெரிட்டேஜ் மியூசியத்தை வைத்திருக்கிறோம். நீங்கள் வரவேண்டும் என்று என்னை அழைத்தார்கள். நான் உடனடியாக வந்தேன். நிகழ்ச்சிக்கு நானும், கமலும்தான் வந்தோம். அப்போது, நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் நான் நினைத்துப் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல, 2006ஆம் ஆண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஓனிக்ஸ் என்ற கம்பெனியை வரவழைத்து அந்த பணிகளை செய்வதற்காக ஈடுபடுத்தியபோது. இதை திரையரங்கத்தில் எப்படியாவது பிரச்சாரம் செய்ய வேண்டும். 

avm-saravanan-mks-fun-1

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே முன்னின்று அதில் யார் யார் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடிகை மனோரமாவையும். தாடி பாலாஜியையும் அழைத்து அந்தக் காணொலியை எடுத்து எல்லா திரையரங்கத்திலும் போட்டுக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்” எனப் பேசினார். இந்நிகழ்வின்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன், மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து,  நல்லி குப்புசாமி, இயக்குநர்கள் எஸ்.பி. முத்துராமன், வி.சி. குகநாதன், ஏ.வி.எம். குடும்பத்தைச் சார்ந்த எம்.பாலசுப்ரமணியம்,  எம்.எஸ். குகன், அருணா குகன் ஆகியோர் உடனிருந்தனர்.

avm studio Chennai film producer mk stalin Tamil Film Producer
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe