Advertisment

“இராசராச சோழன் புகழ் போற்றுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

tj-raja-raja-cholan-sathya-fun-mks

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதயவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் 2 நாட்களாக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சதய விழா நேற்று (31.10.2025) காலை பேரணியுடன் தொடங்கியது. அதன்படி இந்த நிகழ்வின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று (01.11.2025) காலை 7 மணியளவில் நடைபெற்றது. 

Advertisment

இதற்காகத் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து ஓதுவார்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தருமபுரம் ஆதினம் உள்ளிட்ட பலரும் பெரிய கோவிலிலிருந்து யானை மீது திருமுறை வீதி விழாவுடன் பேரணியாக வந்தனர். இதனையடுத்து ராஜராஜ சோழன் சிலைக்கு ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மேலும் யானை மீது திருமுறை வீதி விழாவும் நடைபெற்றது. அதாவது பெரிய கோவிலில் தொடங்கிய திருமுறை வீதி விழா தஞ்சை நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தஞ்சை பெரிய கோவிலை வந்தடைந்தது. 

Advertisment

tj-raja-raja-cholan-sathya-fun

அதன்பிறகு 48 ஓதுவார்கள் பெருவுடையாருக்கு 48 திவ்ய அபிஷேகங்களும் செய்தனர். இதனையடுத்து பெருவுடையாருக்கு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழன் விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களின் கலைத்திறன், போர்த்திறன், கப்பற்கலை, பாசனமுறை என அனைத்தின் உச்சமாக ஆட்சிசெய்து மங்காப் புகழொளியைத் தமதாக்கிக் கொண்ட மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா இன்று!. 

தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பெருமையாக அவர் நமக்காக விட்டுச் சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

raja raja chozhan raja raja cholan Thanjavur Tanjore mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe