Advertisment

“கி. வீரமணியின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

mks-veeramani

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

Advertisment

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம். தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி கி.வீரமணி அய்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Advertisment

பெரியார் திடலும் - அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், கலைஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு திராவிட மாடல் நல்லாட்சி நிலைக்கச் செய்வோம், ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

dmk birthday Dravidar Kazhagam k veeramani mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe