Advertisment

“பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் ராஜ்ஜியம் கிடைக்காது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

kk-mks-speech1

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேற்று (25.02.2026) நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், “ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் 15 இலட்சம் ரூபாய் தருவேன் என்று வடை சுட்ட மாதிரியே, பழனிசாமியும் வாய்க்கு வந்தபடி வெரைட்டி வெரைட்டியாக இப்போது வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வடைகளை எல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை. இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் தேர்தலை காரணமாக காட்டி, மகளிர் உரிமைத்தொகையை மூன்று மாதத்திற்கு நிறுத்தி வைத்துவிடலாம். மக்களுக்கு தி.மு.க. அரசு மீது அதிருப்தியை கொண்டு வந்து, கெட்டப் பெயரை ஏற்படுத்தலாம் என்று சூழ்ச்சி செய்தார்கள். 

Advertisment

இதை அட்வான்சாக நாங்கள் தெரிந்து கொண்டு, என்னுடைய சகோதரிகளுக்கும். தாய்மார்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணமாக வழங்கினேன். நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாவம் எதிர்க்கட்சிகள்தான் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். முதலில், இதை கிண்டலடித்தார்கள். கொச்சைப்படுத்தினார்கள். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களாலேயே நம்முடைய அதிரடி முடிவுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை மறைக்க முடியவில்லை. அதனால். இப்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்கிறார்கள். எங்களால்தான் இது நடந்தது என்று உரிமை கொண்டாட வந்திருக்கிறார்கள்.

Advertisment

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி புலம்புங்கள். எங்கள் திட்டங்கள் இப்போது ஹிட்டாகிவிட்டது. 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு தொகுப்பு மக்களிடம் சூப்பர் ஹிட். ஹிட்டோ ஹிட். பா.ஜ.க. டப்பா எஞ்சினை நம்பி. அ.தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க. என்ற மூழ்கும் கப்பலை நம்பி. பா.ஜ.க. இருக்கிறது. பூஜ்ஜியமும்,  பூஜ்ஜியமும் சேர்ந்தால். பூஜ்ஜியம்தான்! ராஜ்ஜியம் கிடைக்காது. திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின் 11.19 சதவிகிதம் இரட்டை இலக்கு வளர்ச்சியோடு யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிவேகமாக முன்னால் சென்று கொண்டிருக்கிறது. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையும். இப்போது நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளை எங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் (Second Innings) இல் நாங்களே மிஞ்சுவோம்” எனத் தெரிவித்தார்.

Assembly Election 2026 magalir urimai thogai edappadi k palaniswami Kanyakumari mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe