தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துm, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் எவ்வளவு தெரியுமா?. ஒரு கோடியே 70 இலட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 இலட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன். இது நம்முடைய ஆட்சியின் டேட்டா!
இதுவே முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில். சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 22 இலட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் மட்டும்தான்! இந்த அடிப்படை கூட தெரியாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவரிடம் பொய்யையும். துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவருடைய ஹிஸ்டரியே அதுதான். நெல் கொள்முதல் குறித்த மேலும் சில புள்ளிவிவரங்களை சொல்ல வேண்டும் என்றால், அதிமுக ஆட்சிக் காலத்தில், அக்டோபர் முதல் தேதிதான் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது.
திராவிட மாடல் ஆட்சியில் ஒரு மாத காலம் முன்பாகவே, அதாவது செப்டம்பர் முதல் நாளே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் பருவமழைக்கு முன்பாகவே விவசாயிகள் நெல் அறுவடை செய்து, புதிய விலையில், நெல்லை விற்க ஒரு மாதத்திற்கு முன்பாகவே, செப்டம்பர் 1ஆம் தேதியே கொள்முதல் தொடங்கப்பட்டுவிட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். அவர்களும் அந்த கோரிக்கையை பார்த்துவிட்டு, வந்து பார்வையிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/29/eps-mic-3-2025-10-29-15-49-07.jpg)
நெல் வரத்து அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக் கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகிறது. இது எதுவும் தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசிக் கொண்டிருக்கிறார். புலம்பிக் கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரைக்கும், தினந்தோறும் இதைப் பற்றி விசாரித்து நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கின்ற பழனிசாமி ஆட்சியில் தான் மிக மோசமான நிலை - என்னவென்றால், மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது.
அதற்கு எதிராக. 2 ஆண்டு காலம் போராடுகின்ற விவசாயிகளைப் பற்றி என்ன சொன்னார் பழனிசாமி, 'புரோக்கர்கள்' என்று கொச்சைப்படுத்தி பேசினார் அதை நானும் மறக்கமாட்டேன். விவசாயிகளும் மறக்க மாட்டார்கள். திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/tenkasi-mks-speech-2025-10-29-15-48-25.jpg)