பீகாரைத் தொடர்ந்து வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (S.I.R - Special Intensive Revision) தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளுக்கான கால நீட்டிப்பை வழங்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதில், “நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (08.12.2025) நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி பார்வையாளர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த மாவட்டச் செயலாளர் கூட்டம், “எண் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகளைப் பொறுத்த வரை திமுகவினர் நிறையக் கஷ்டங்கள் பட்டிருந்தாலும், பாதி கிணற்றைத்தான் தாண்டி இருக்கிறோம்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/08/dmk-ds-meeting-dec-08-2025-12-08-11-18-46.jpg)