திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று (14.12.2025) நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஒன்றியத்தில் பாஜக அரசு 3வது முறையா ஆட்சி அமைத்திருக்கக்கூடிய ஆணவத்தில் வலதுசாரி அமைப்புக்கள் பிற்போக்கு சக்திக்கள் எல்லாம் ரொம்ப வேகமாக, முன் எப்போதும் இல்லாத ஆக்ரோஷத்தோடு செயல்பட தொடங்கி இருக்கிறார்கள். வெளுத்ததெல்லாம் பால் என நம்பக்கூடிய மக்களிடம் பொய்களை அவதூறுகளை பிற்போக்கு எண்ணங்களை தேன் தடவி வார்த்தைகளால் கொண்டு போய் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு சொல்கிறேன். 

Advertisment

எல்லோரும் ஃபேமிலி பிரண்ட்ஸ் வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பீர்கள். அதில் சொந்தங்கள் தங்களுடைய அன்பை உணர்வை பரிமாறிப்பீர்கள்.  ஆனால் அதில் ஒருத்தர் மட்டும் எதை பத்தியும் கவலைப்படாமல் விஷம் தேய்ந்த கருத்துக்களை பார்வர்ட் பண்ணுவர்கள். பலரும் ஏதோ படிக்காமல் அனுப்பி இருக்கிறார் என்று கடந்து போய்விடுவோம். அதை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு அவரும் தொடர்ந்து மெசேஜ் அனுப்புவார். அப்படிப்பட்டவங்களுடைய பிற்போக்கு கருத்துக்கள் தொற்றுநோய் மாதிரி வேகமாக பரவும். அதை தடுக்க வேண்டு என்றால் அதற்கு மாற்று மருந்தான நம்முடைய கொள்கைகளையும் நாம் தீவிரமாக பரப்ப வேண்டும். பொய்யை பேசுவதுக்கு ஒருத்தர் தயங்காத போது உண்மையை பேசுவதற்கு நெஞ்சில் உரம் இருக்க நாம் ஏன் தயங்க வேண்டும். 

Advertisment

எதற்காக இதை சொல்கிறேன் என்றால் இப்போது நம் தோளில் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் காக்க வேண்டிய கடமை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாட்டோட பன்முக தன்மையையும் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்தியாவிலேயே பாஜகவும் எதிராக ஐடியாலஜிக்கல் பைட் செய்துக் கொண்டு இருக்கக்கூடிய ஒரே மாநில கட்சி  திமுகதான். அவர்களால் வெற்றி கொள்ள முடியாதது தமிழ்நாட்டை மட்டும்தான். அதனால் தான் அமிஷா போன்றோருக்கு நம் மேல் எரிச்சல். 

amit-shah-tn-mic

அண்மையில கூட அவர் என்ன பேசினார். பீகாரில் ஜெயித்துவிட்டோம் அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான் சொல்கிறார். அமித்ஷா அவர்களே நீங்கள் இல்லை உங்கள் சங்கிப்படையே கூட்டிக்கிட்டு வந்தாலும் உங்களால் ஒன்னும் இங்கே எதுவும் செய்ய முடியாது. இது தமிழ்நாடு. எங்களுடைய கேரக்டரே புரிஞ்சுக்க மாட்டறீங்களே. அன்போடு வந்தால் அரவணைப்போம். ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நிற்போம்” எனப் பேசினார்.

Advertisment