உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு தினம் இன்று (01.01.2026) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு 12 மணியில் இருந்து  புத்தாண்டை உலகின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதாவது, பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதோடு கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். 

Advertisment

அதே போன்ற கொண்டாட்டம் சென்னையிலும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அனைவருக்கும் 2026 புத்தாண்டு தின வாழ்த்துகள். மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம், தமிழ்நாட்டு மக்களான நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்’ என்று தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டார். அப்போது அமைச்சர்கள் எ.வ. வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைவர் கலைஞரின் நினைவுகளோடு புத்தாண்டு இரவில்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.