Advertisment

அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக்கொலை; முதல்வர் அதிரடி உத்தரவு!

kudimangalam-si-mks

திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்தவர் சண்முகவேல் (வயது 57) ஆவார். அதே காவல் நிலையத்தில் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றி வந்தவர். அழகுராஜா.

Advertisment

இவர்கள் இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து (அ.தி.மு.க. எம்.எல்.ஏ.) சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டினர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன். 

Advertisment

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”எனத் தெரிவித்துள்ளார்.

Tiruppur sub Inspector CM RELIEF FUND mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe