கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர், “எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சாதனைகள், ஒன்றிய அரசு வெளியிடும் தரவரிசைகள் எல்லாவற்றிலும், நம்பர் ஒன் ரேங்க் நாம் தான். உலக அளவிலான விருதுகள் என்று நெஞ்சை நிமிர்த்தி, காலரை தூக்கி நடப்பது போல, ரெக்கார்டு. தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
நான் கேட்கிறேன் இதில் 5 சதவிகிதமாவது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா. இது என்னுடைய ஒப்பன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் சொல்லுங்கள். 5 சதவிகிதம் கூறுங்கள். பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பாழாய் போன தமிழ்நாடு, திராவிட மாடலின் நான்காண்டு காலங்களில், துள்ளிக் குதித்து இன்றைக்கு எழுந்திருக்கிறது. இனி நமக்கு எப்போதும் ஏறுமுகம்தான். ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் மீறி அவர்களின் உதவி இல்லாமல், இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு வளரவே கூடாது என்று அவர்கள் அமைக்கின்ற ஸ்பீட் - பிரேக்கரை எல்லாம் தாண்டிதான், இந்த இடத்தில் நாம் நிற்கிறோம். ஆனால், 'இது எதையுமே பார்க்க மாட்டோம்; செய்திகளை படிக்க மாட்டோம்; உண்மையை பேச மாட்டோம்; தமிழ்நாட்டின் சாதனைகளைப் பற்றி வாயே திறக்க மாட்டோம்" என்று சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்வது, நீங்கள் இப்படியே கண்ணை மூடிக் கொண்டிருங்கள். நாங்கள் அடித்து தூள் கிளப்பி சென்று கொண்டே இருப்போம். திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு மகுடமாக, 2026 தேர்தலில், மக்கள் அளிக்கும் தீர்ப்புதான், உங்களுக்கான ரியாலிட்டி 'செக்'-ஆக இருக்கும். இப்போது நான் சொன்ன தமிழ்நாட்டின் சாதனைகள் வளர்ச்சி நிறைந்த ஒரு இந்தியா என்றால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறு ஒரு இந்தியா இருக்கிறது. வறுமை, மத வன்முறை, கும்பல் படுகொலைகள், கல்வியைக் கெடுக்கும் முயற்சிகள், வேலைவாய்ப்பின்மை... இதுதான் பா.ஜ.க.வின் இந்தியா” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/26/kk-mks-speech-2025-12-26-22-36-53.jpg)