ராமநாதபுரத்தில் நாளை நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

Advertisment

ராமநாதபுரத்தில் நாளை (03.10.2025) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு இன்று (02.10.2025) மாலை 06.00 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்காகச் சென்னை விமான நிலையம் வந்திருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

Advertisment

அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலினை, அமைச்சர்கள் சேகர்பாபு பாபு மற்றும் தா.மோ. அன்பரசன், எ.வ. வேலு, ஆவடி நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழியனுப்பி வைத்தனர். மேலும் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் விமான நிலையத்தில் குவிந்தனர். நாளை ராமநாதபுரம் மாவட்டத்தில் 176 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.