சென்னை சர்தார் பட்டேல் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தமிழக அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து சர்தார் பட்டேல் சாலையையும் இராஜீவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் ’எல்’ வடிவில் மேம்பாலம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 652 மீட்டர் நீளம் கொண்ட ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ‘எல்’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் பயன்பாட்டிற்காக இன்று (15.02.2026) திறந்து வைத்தார். இதன் மூலம் கிண்டி - ராஜீவ்காந்தி சாலையில் செல்பவர்களுக்குப் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலத்தைத் திறந்து வைத்த முதல்வர் தனது காரில் மேம்பாலத்தில் பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/15/l-shape-bridge-mks-2026-02-15-11-26-42.jpg)