சென்னை அறிவாலயத்தில் இன்று கூடிய திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் கலந்துகொண்டனர். 

Advertisment

தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர்  பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது. அதே போல எந்தவொரு தகுதி இல்லாத வாக்காளரையும் பட்டியலில் இணைத்துவிடக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும் பணிகள் தொடங்கப்படாத, திமுக BLA-2க்கள் பணிகளைத் தொடங்காத பாகங்களின் பட்டியல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்தும் விரிவாக  விவாதிக்கப் பட் டிருக்கிறது.  

Advertisment

இந்த கூட்டத்தில், SIR குறித்து களத்தில் சந்திக்கும் சவால்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுடன் மற்றவர்களுக்கு உதவும் சிறப்பான (அல்லது) எளிமையான வழிமுறைகள் (Best practices) ஆகியவற்றையும் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பாஜக செய்து வருகிறது என்பதையும் விவரித்த முதல்வர், "வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் என்ற எந்தவொரு நிறுவனத்தையும் நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். 

களம் நம்முடையதுதான். நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என்று சொல்கிறார்கள் " என்றார் ஸ்டாலின்.

Advertisment