தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறை நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது அமைச்சர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர். 

Advertisment

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஜெர்மனி நாட்டு சுற்றுப்பயணம் மூலம் 6 ஆயிரத்து 250 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் ரூ.3 ஆயிரத்து 201 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரயில் கதவுகள், பிரேக்குகள் தயாரிக்கும் நார்-ப்ரீம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 3 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காற்றாலைக்கு டர்பைன் தயாரிக்கும் நார்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யயப்படவுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். திறன்மிகு மின் மோட்டார்கள் தயாரிக்கும் இபிஎம் பாஸ்ட் நிறுவனத்தின் சார்பில் ரூ.201 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.