தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி வரும் 25ஆம் தேதி (25.11.2025) அன்று காலை கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து 26ஆம் தேதி (26.11.2025) அன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானின் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்ய உள்ளார். மேலும், சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் தொடங்கிவைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அன்று மாலையில், சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை பரமசிவனின் உருவச் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். கோயம்புத்தூரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், கலைஞர், செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2023 அன்று கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் அதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன்படி அப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், 25.11.2025 அன்று காலை உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்காவினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/22/car-mks-our-stalin-image-2025-11-22-12-49-02.jpg)