Advertisment

சொகுசு காரை இயக்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

mks-car

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 2024ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. 

Advertisment

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் (28.09.2024) அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் ராணிப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (09.02.2026) திறந்து வைத்தார். இதனையடுத்து ரத்தன் டாட்டாவின் உருவச்சிலைக்கு  மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அங்குள்ள கார் உற்பத்தி அரங்குகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரை பார்வையிட்டு காரில் அமர்ந்தார். அப்போது டாட்டா குழுமத் தலைவர் சந்திரசேகரன் கார் குறித்து விளக்கம் அளித்தார். 

Advertisment

அதாவது கார் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எத்தனை நாட்களில் உற்பத்தி செய்யப்படுகிறது போன்ற தகவல்கள் பற்றி விளக்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து முதலாவது ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறிது தூரம் இயக்கி பார்த்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர், டி.ஆர்.பி. ராஜா, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலை ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 16 மாதங்களில் உற்பத்தி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Driving ranipet mk stalin TATA Group car tata
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe