Advertisment

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி : முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

icc-u19-india-champion-mks

19 வயதுக்குட்பட்டோர் கலந்து கொள்ளும் 16வது (யு19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதி போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று (06.02.2026) நடைபெற்றது. இந்த போட்டியில், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியோடு மோதியது. முதலில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

Advertisment

அதன்படி வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, அபிக்யான் அபிஷேக் குண்டு ஆகியோர் சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்து அணிக்கு வலு சேர்த்தனர். அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்கள் குவித்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் இங்கிலாந்து அணியில் காலேப் மேத்யூ பால்கனர், பென் டாக்கின்ஸ், பென் மேயஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 

Advertisment

கடந்த 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய 5 ஆண்டுகளில் இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய அணி, 2026லும் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி ஆண்கள் 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கோப்பையை வென்று நாட்டிற்கு மற்றுமொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய நமது இந்திய அணிக்கு வாழ்த்துகள். 

mks-6

இது திறமை மற்றும் மன உறுதியால் கிடைத்த உண்மையான வெற்றி. இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் பிரமிக்க வைக்கும் ஆட்டமும், இந்தத் தொடர் முழுவதும் அவரது அபாரமான பங்களிப்பும் பல ஆண்டுகளுக்கு நினைவு கூறப்படும். இந்த இளம் படையினர் தங்களின் இந்தத் திறமையை மென்மேலும் பல வெற்றிகளாக மாற்றி, உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

UNDER 19 WORLD CUP world championship icc world cup ICC mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe