கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நவாஸ் (வயது 35) குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்தவர் நவாஸ் (தந்தை பெயர் : அன்வர்). இவர் கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், கடந்த 25.8.2025 அன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

கத்தார் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாஸ் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்த .நவாஸ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.