தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சரகம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம் நாஞ்சிக்கோட்டை சரகம், மாதாக்கோட்டை மேம்பாலம் அருகில் நேற்று (13.08.2025) மாலை 06.00 மணியளவில் தஞ்சாவூரிலிருந்து பனங்காடு சாயபுரம் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவிலிருந்து நாகூருக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்த இனோவா கார் ஒன்று பின்னால் வந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அறிவழகன் (வயது 37), செல்வி.பவியாஸ்ரீ (வயது 9) மற்றும் தேஜாஸ்ரீ (வயது 4) ஆகிய 3 நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உஷா (வயது 37) அறிவழகன் மற்றும் ரூபா (வயது 10) ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2025/08/14/cm-relief-mks-2025-08-14-07-29-46.jpg)