Advertisment

“இதுதான் பா.ஜ.க.வின் லட்சணமா?” - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!

delda-mks

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுகவின் டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று (26.01.2026) நடைபெற்றது. இதில் திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில், “இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த  பிரதமர் மோடி, ஏராளமான பொய்களைச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். உலக வரைபடத்தில் இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் சென்றுவிட்டு, தேர்தல் காலங்களில் இந்தியாவிற்குள் வருவார் பிரதமர் மோடி. இப்போது தமிழ்நாட்டுக்குத் தேர்தல் சீசன் என்பதால், இங்கேயும் வந்தார். இனியும் வருவார்.

Advertisment

பிரதமர் வருகிறார் என்றதும், நான் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தேன். அதை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்; ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்; பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். ஆனால், அவர், அது எதற்கும் பதில் சொல்லாமல், வழக்கம்போல் பழைய 'கண்டெண்ட்'-ஐயே பேசிவிட்டு, நமக்கு புது ‘கண்டெண்ட்’ கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று ஒரு அபாண்டமான பொய்யைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். பெண்களான நீங்களே சொல்லுங்கள்... தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா? எப்படி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறார் பாருங்கள். நாட்டில், இப்போது என்ன நடந்துகொண்டு இருக்கிறது. 

Advertisment

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், குறிப்பாக, பா.ஜ.க.வினரால் பெண்கள் படும் தொல்லைகள் என்று அனைத்தையும் தெரிந்துகொண்டே, தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப விமானத்தில் வந்துவிட்டுச் சென்றிருக்கிறார். பிரதமர் அவர்களே... ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியிருக்கும் இந்த மாநாட்டில் நின்றுகொண்டு, நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன். இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடுதான். அடித்துச் சொல்கிறேன். இங்குதான், அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அண்மையில், அவதார் என்ற குழுமம், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

nda-meeting-modi

125 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில், முதல் 25 நகரங்களில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு ஆகிய ஏழு நகரங்கள் இருந்தது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?. பிரதமர் அவர்களே... மணிப்பூரை மறந்துவிட்டீர்களா? 2023ஆம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில், இதுவரைக்கும் அரசு கணக்குப்படி, ஒருவர், இருவர் அல்ல... 260 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு இருக்கும். 3 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு லட்சம் பேருக்கு மேல், மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்துவிட்டார்கள். 

மூன்று ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், ஒன்றியத்தை ஆள்வதும், மணிப்பூரை ஆண்டதும் பா.ஜ.க.தான். ஆனால், நீங்கள் டபுள் எஞ்சின் என்று ஓட்டிய டப்பா எஞ்சின் மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை?. மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் வீடு, அமைச்சர்கள் வீடு, எம்.எல்.ஏ.க்கள் வீடு, பிரேன் சிங்கின் மருமகனும் எம்.எல்.ஏ.வுமான ராஜ்குமார் இமோசிங் வீடு என்று அனைத்தையும் போராட்டக்காரர்கள் தாக்கி, தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க.வால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான், பா.ஜ.க.வின் லட்சணமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

dmk b.j.p mk stalin Narendra Modi nda alliance Tanjore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe