இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று (26.11.2025) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதில் அரசின் அனைத்து துறைகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க அவர் உத்தரவிட்டிருந்தார். 

Advertisment

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடதத்திடவும்  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு அல்ல. 

Advertisment

இந்த அரசியலமைப்பு தினத்தில், பாபாசாகேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைச் சுருக்க முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியையும் எதிர்ப்பதற்கான நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம். நமது அரசியலமைப்பிற்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் வாக்குறுதியை அஞ்சுபவர்களிடமிருந்து நமது குடியரசைப் பாதுகாப்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.