'வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்றவர் ஈரோடு தமிழன்பன். கவிஞராக மட்டுமின்றி நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளர், ஓவியர், திரைப்பட இயக்குநர் என பன்முகங்களைக் கொண்டவர் ஈரோடு தமிழன்பன். தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisment

புதுக்கவிதை, மரபுக் கவிதை, ஹைக்கூ என பல்வேறு கவிதை படைப்பு தளங்களில் இயங்கியவர்களில் மிகவும் முக்கியமானவர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் என பல முக்கியப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு தமிழன்பன் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று  உயிரிழந்தார். அவரது மறைவு இலக்கிய உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

முதல்வர் ஸ்டாலின் நேற்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செல்த்தியிருந்ததார். இந்த நிலையில், கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மறியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனது இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர். அவரின் தமிழ் தெண்டினை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.