உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் உள்ள தாராலி என்ற மலைப்பாங்கான இடத்தில் திடீர் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கிர் கங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாறைகள் சரிந்து வீடுகள் மீது விழுந்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. தற்போது வரை இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.