City on the moon in a decade; Elon Musk confirms Photograph: (moon)
உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இருப்பினும், செவ்வாய்க் கிரகத்தில் ஒரு நகரத்தை உருவாக்குவதற்கு 20 ஆண்டுகள் தேவைப்படும். அதே நேரத்தில், செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 6 மாத காலம் எடுக்கும்.
மேலும், கோள்கள் ஒவ்வொன்றும் 26 மாதங்களுக்கு ஒரு முறை நேர்கோட்டில் வரும் போது மட்டுமே, செவ்வாய்க் கிரகத்திற்குப் பயணிக்க முடியும். எனவே, செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவதை விடவும், நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது எளிதானது. காரணம், நிலவிற்கு இரண்டு நாட்களில் செல்ல முடியும். மேலும், நிலவிற்கு ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை விண்கலத்தை ஏவ முடியும். எனவே, நிலவில் மிகச் சுலபமாக இதைச் சாத்தியப்படுத்த முடியும்.
எனவே, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்கிட முடியும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் செய்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவதற்கான பணிகளும் தொடங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல புதுவிதமான முயற்சிகளைக் கையிலெடுத்து வெற்றி கண்டிருக்கும் நிலையில், இந்த முயற்சியும் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us