தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் விழா!
கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நேற்று முன்தினம் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். அதே போல் பல்வேறு கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறுஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இன்று (22-12-25) தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்க ஏற்கெனவே கியூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அதனால் கியூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி சீட்டு இல்லாதவர்கள் இந்த விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை.
இந்த விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் 40 கிலோ கேக்கை வெட்டி 11 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் திருக்குறள், டிக்ஸ்னரி, இனிப்புகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி கொண்டாடப்பட்டது.
Follow Us