கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இளைஞா் இயக்கம் சாா்பில் 28வது அருமனை கிறிஸ்துமஸ் விழா நேற்று (23.12.2025) இரவு நடைபெற்றது. முன்னதாக இதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், த.வெ.க நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பிரின்ஸ், தாரகை காட்பட், ராஜேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான், இந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதே சமயம் இந்த கிறிஸ்மஸ் விழாவில் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். 

Advertisment

இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஆதவ் ர்ஜுனா கலந்து கொண்ட நிலையில், திடீரென அங்கு வந்த விஜய் ரசிகர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் ஊர்வலத்தைக் காண வந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். அது மட்டுமின்றி  விழா நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையிலும், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சிலருக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

kanyakumar-congress-mp-mla-chrismat

அப்போது த.வெ.க. தொண்டர்களை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தாக்கியுள்ளனர்.  அச்சமயத்தில் இந்த சம்பவத்தைப் படம் பிடிக்க முயன்ற செய்தியாளர் மீது தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதோடு  செய்தியாளரின் கேமராக்களையும், மொபைல் போன்களையும் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து  செய்தியாளர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment