திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் (பாதுகாப்பு துறை நிறுவனங்களான எச்இபி எஃப் துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் பெல் நிறுவனத்தைச் சார்ந்த பல நூற்றுக்கணக்கான சிறுகுரு தொழிற்சாலைகள் என்ஐடி, ஜிபிடி, ஐடிஐ உள்ளிட்ட பல்வேறுகள் கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. இதனால் திருவெறும்பூரில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொழிலாளர்களும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருச்சி தஞ்சை மார்க்கமாக 10க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள் தோறும் இந்த வழியாக வந்து செல்கின்றது. இதில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் நின்று செல்கிறது. மாற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதில்லை
இந்த நிலையில் திருவெறும்பூர் ரயில் நிலையம் ஆதர்ஷ் அந்தஸ்து பெற்றதாகும். இதனால் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இங்கு நின்று செல்ல வேண்டும் என பொதுமக்களும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் தொழிலாளர்களும் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி எம்பி துரை வைகோ அவர்களிடமும் இதே கோரிக்கையை வைத்தனர். அதன் அடிப்படையில் திருச்சி எம்பி துரை வைகோ தனது முயற்சியினால் திருச்சியில் இருந்து தாம்பரம் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த அக்டோபர் மாதம் முதல் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு வழிவகை செய்தார்.
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்பொழுது சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் இன்று (26.01.2026) முதல் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த முயற்சி திருச்சி எம்பி துரை வைகோவின் தீவிர முயற்சியால் நடந்தது அதனைத் தொடர்ந்து இன்று மதியம் 12. 25 மணிக்கு திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் திருச்சி எம்பி துரை வைகோ தலைமையிலான மதிமுகவினர் மற்றும் ரயில்பயன்பாட்டாளர் நல சங்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் மலர் தூவி இனிப்பு வழங்கி வரவேற்றனர். துரை வைகோ ரயில்வே பைலட்டுகளுக்கு சால்வை அணிவித்தார். பின்னர் திருவெறும்பூர் ரயில் நிலையத்திலிருந்து துரை வைகோ கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்ததோடு அந்த ரயிலில் ஏறி பயணம் செய்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/26/durai-vaiko-train-1-2026-01-26-21-52-32.jpg)
அதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் துரை வைகோ கூறியதாவது, “திருச்சி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தொகுதிக்காகவும் மக்களுக்காகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னால் என்னென்ன முடியுமோ அதனை செய்து வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக இன்று மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு ரயில் இன்று முதல் நின்று செல்லும் திருவெறும்பூர் திருச்சியின் மையப்பகுதியாகவும் தொழிற்சாலை கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதியாகவும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு பல்வேறு விரைவுகள் நின்று சென்றது. அதன் பிறகு 90 சதவீதமான ரயில்கள் நிற்பதில்லை இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்து இதோடு அதனை தொடங்கி வைத்ததாகவும் .
அதேபோல் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் மதிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை நேரடியாக சந்தித்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்நிற்க நடவடிக்கை எடுக்க வருமாறு கடந்த 2024ஆம் ஆண்டு கோரிக்கை வைத்ததாகவும் டிசம்பர் மாதம் கேள்வி நேரத்தின் போது பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டதாகவும் அதன் அடிப்படையில் தற்போது இந்த ரயில் நின்று செல்வதாக இது மட்டுமல்ல பல ரயில்கள் நின்று செல்வதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் திருச்சி ரயில்வே துறையில் கடந்த ஒன்னரை ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் புதுக்கோட்டையில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தற்போது வரை நின்று செல்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/26/durai-vaiko-train-2-2026-01-26-21-52-51.jpg)
மேலும் ரயில்வே துறையில் கட்டமைப்புகள் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது அதனை நடைமுறைபடுத்தி செயல்பட்டு வருவதாகவும் அதன்படி சில முக்கிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஈபி ரோடு ஓஎம்ஆர் ரோடு இணைப்பு சாலை ரூ 23 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருவதாகவும் டவுன்ஹால் ரயில்வே சுரங்கப்பாதை ஒரு மாத காலத்தில் தொடங்கும் மாரிஸ்தியேட்டர் ரயில்வே மேம்பாலம் பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். பழைய பாலம் இடிக்கப்படாததால் தான் இந்த பணி தேங்கியதாகவும் தற்பொழுது அதனை இடிப்பதற்கு வலியுறுத்தியதாகவும் அது ஒரு வார காலத்தில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பணி விரைவில் முடிந்து திறப்பு விழாவுக்கு வரும் என்றும் அதே போல் அரிஸ்டோ பணியும் விரைந்து நடைபெற்று வருவதாகவும் அது ஜூன் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் மேலும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தண்ணீர் மற்றும் கழிவு அறையில் தண்ணீர் இல்லாதது குறித்து தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதாகவும் கூறினார்.
குமரேசபுரம் ரயில்வே சுரங்க பாதை குறித்து கேட்டதற்கு அதற்கு உரிய டிசைன் போடும் பணி கடந்த டிசம்பர் மாதமே நடந்தது தற்பொழுது டெண்டர் நிலையில் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று அது பற்றி கேட்டு சொல்வதாகவும் அதேபோல் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை திருச்சியை கலெக்டர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்குவார் அதன் பிறகு பணி தொடங்கும் அதேபோல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் பற்றிய எந்தவித பிரச்சனையும் தமக்கு தெரியும் அது சம்பந்தமாக விரிவான அறிக்கையை மனுவாக வழங்கினால் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க மேற்கொள்வதாகவும் பத்திரிகையாளர்கள் தாங்கள் இதுபோன்ற பிரச்சனையான செய்திகளை போடும்போது அந்த செய்தி நகலை வாட்சப் மூலம் எனது செல் நம்பருக்கு அனுப்பினால் அதனை வைத்து நான் தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடியும். பல பிரச்சனைகள் எனக்கும் தெரியாது
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/26/durai-vaiko-train-3-2026-01-26-21-53-55.jpg)
திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்வதற்கு சரியான பாதை இல்லை என்றும் இந்த பாதையை ஆக்கிரமிப்புகள் பல உள்ளது இதனால் பல ஆயிரம் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் அதனால் இந்த பாதையை எடுப்பது சிரமம் அதற்கு மாற்று பாதை பார்த்து ஆய்வு செய்யப்பட்டது அந்தப் பாதையில் பயணிகள் வந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிவுறுத்தி இருந்த நிலையில் ஒரு மாதத்தில் அந்த பகுதியில் ஒரு கோவிலை கட்டி ஆக்கிரமித்து விட்டார்கள் அந்த ஆக்கிரமிப்புகளை எடுப்பதற்கு உரிய நடவடிக்கை மாநகராட்சி அதிகாரிகளும் ரயில்வே துறையினரும் மேற்கொண்ட பிறகு தான் இந்த ரயில் நிலையத்திற்கு எளிதாக வந்து செல்வதற்கு உரிய வழிவகை செய்யப்படும் மாற்று திறனாளிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடை மேடைக்கு சென்று வருவதற்கு ஏதுவாக எக்ஸ்லேட்டர் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பேசப்படும் இந்த ரயில் நிலையத்தில் எவ்வளவு மாற்றுத்திறனாளிகள் இந்த நடைமுறையை பயன்படுத்திகிறார்கள் என்பதை பொறுத்துதான் அதனை கொண்டு வருவார்கள் ஆனால் அதற்குரிய பணியை செய்வதாகவும் மேலும் இங்கு பேட்டரி கார் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/26/durai-vaiko-train-2026-01-26-21-51-56.jpg)