திருவண்ணாமலை அருகே அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் என நினைத்து பெயிண்ட்டில் கலக்கப்படும் தின்னரை குடித்த குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ளது நீச்சநல்லூர். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணி கடந்த ஒரு வாரமாகவே நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் வர்ணம் பூசுவதற்காக பெயிண்ட்டில் கலக்கப்படும் தின்னர் வைக்கப்பட்டிருந்தது. அங்கன்வாடிக்கு வந்த நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் தின்னரை தண்ணீர் என நினைத்து தெரியாமல் எடுத்துக் குடித்து விட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/09/a5463-2025-10-09-17-56-49.jpg)
இதனைக் கவனித்த அருகில் இருந்த பணியாளர் ஓடி வந்து குழந்தைகளிடம் இருந்து தின்னர் பாட்டில்களை வாங்கி கீழே வீசிவிட்டு குழந்தைகளை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் உடனடியாக குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.