Children seriously injured after being electrocuted on a platform Photograph: (road safety)
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற பொழுது மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவல்லிக்கேணி பகுதியில் பிளாட்பார்ம் பகுதியில் வசித்து வரக்கூடிய நீலமேகம்(13), ஆறுமுகம் (7) என்ற இரண்டு சிறுவர்கள் கலைவாணர் அரங்கம் அருகே நடைமேடையில் நேற்று நடந்து சென்ற பொழுது சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது நடைமேடையில் இருந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சிறுவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நேற்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வந்தது பெய்திருந்த நிலையில் பல்வேறு இடங்களில் மழை தேங்கியது குறிப்பிடத்தக்கது.