கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மன் கோவில் கிராமத்தில் பள்ளி சிறுவர்களுக்கு அப்பகுதியினைச் சேர்ந்த  பிரபல குற்றவாளி சுகுந்தன் (வயது 27) என்பவர் மதுவினை கட்டாயப்படுத்தி ஊற்றி குடிக்க வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி செந்தில்  நேரில்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த விசாரணையில் ஒரு சிறுவனை மிரட்டி கட்டாயப்படுத்தி கை கால்களை கட்டிப்போட்டு மதுவை வாயில் ஊற்றியதாகவும் இன்னொரு மாணவனுக்கு அடித்து குடிக்க வைத்ததாகவும் மற்றொரு மாணவனுக்கு மிரட்டி குடிக்க வைத்து வீடியோ எடுத்ததாகவும் புகார் தெரிவித்து உள்ளனர். 

Advertisment

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுகந்தன் மீது மின்மாற்றியில் காப்பர் காயில்களை திருடி விற்பனை செய்தது, சிதம்பரத்தில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டபோது அதற்கான தளவாட இரும்பு பொருட்களை திருடி விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.