தன்பாலின ஈர்ப்பால் பெற்ற பெண் குழந்தையை தாயே கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னட்டி கிராமத்தை சேர்த்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வருபவர் லீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது. இருவரும் தன்பாலின ஈர்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

லீலா மற்றும் கவிதா அடிக்கடி தொலைபேசியில் பேசுவதால் சந்தேகமடைந்த சுரேஷ் இதுகுறித்து கண்டித்துள்ளார். அதேநேரம் குடும்ப பிரச்சனைகள் காரணமாக சுரேஷ்- கவிதா தம்பதி சண்டையிட்டு வந்துள்ளனர். லீலா மற்றும் கவிதா தன்பாலின ஈர்ப்பில் இருப்பதாக ஊரார் மத்தியில் தகவல் பரவ, நாங்கள் தோழிகளாகத்தான் பழகி வருகிறோம். எல்லோரும் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள் என தெரிவித்து வந்துள்ளனர்.

சுரேஷ் வீட்டில் ஒரு முறை பணம் மற்றும் 9 சவரன் நகை காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதற்கும் கவிதா தான் காரணம் என வீட்டில் பிரச்சனைகள் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறை வீட்டில் பிரச்சனை ஏற்படும் போதும் இறுதியில் லீலாவுடன் தொடர்பில் இருப்பதாக கணவன் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.  

Advertisment

இதனை அறிந்துகொண்ட லீலா 'உனக்கு நான் முக்கியமா உன் கணவன், குழந்தை முக்கியமா?' என வாட்ஸ் அப்பில் கவிதாவிற்கு குறுந்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை 'உனக்குத்தான் குழந்தை இருக்கே நான் எதற்கு' என லீலா கவிதாவிடம் கேட்டதாகக் கூறப்படும் நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் திடீரென பக்கத்து வீட்டிற்கு சென்ற கவிதா, குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாகத் தெரிவித்துள்ளார். உடனே குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது தெரிந்தது. 

022
child incident Photograph: (krishnagiri)

அதன்பின்னரே கவிதாவின் செல்போனை அவரது வீட்டார் சோதனை செய்தபோது இருவரும் இது தொடர்பாக பேசிக்கொண்ட வாட்ஸ்அப் ஆடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவிதாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தால் குழந்தை உயிரிழப்பிற்கு உண்மை காரணம் தெரியவரும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குழந்தை மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  

''குழந்தையை சாகடிச்சிட்டு என வாய்ஸ் ரெக்கார்ட் போட்டு சொன்னா...' பேசும் என தாய் ஆடியோ ஒன்றும் இந்த சம்பவத்தில் வைரலாகி வருகிறது.