வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள.

நார்-ப்ரெம்ஸ் (Knorr-Bremse)

Advertisment

ம்யூனிக்கை தலைமையிடமாகக் கொண்ட பிரேக்கிங் சிஸ்டங்களில் உலகளாவிய அளவில் முன்னணி நிறுவனமான நார் ப்ரெம்ஸ், ரயில்வே கதவுகள், பிரேக்கிங் சிஸ்டங்களுக்கான அதிநவீன வசதியை நிறுவ ரூ. 2000 கோடி புதிய முதலீட்டை அறிவித்துள்ளது. இது நார்-ப்ரெம்ஸ் தமிழ்நாட்டில் செய்யும் முதல் பெரிய உற்பத்தித்திறன் கொண்ட முதலீடாகும். இந்தத் திட்டம் 3,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

நார்டெக்ஸ் குழுமம் (Nordex Group)

உலகின் முன்னணி காற்றாலை உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெர்மனியை சேர்ந்த நார்டெக்ஸ் குழுமம், ரூ. 1000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, 2,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் முன்னோடியான தமிழ்நாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

ஈ.பி.எம். பாப்ஸ்ட் (ebm-papst)

ஆற்றல் திறன் கொண்ட மின்சார மோட்டார்கள் மற்றும் காற்றியக்க தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ebm-papst, தமிழ்நாட்டில் அதன் உலகளாவிய திறன் மையம் (GCC) மற்றும் உற்பத்தித் தளம் இரண்டையும் விரிவுபடுத்த இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ரூ. 201 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த விரிவாக்கம், HVAC, ஆட்டோமொடிவ் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் 250 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

Advertisment

தமிழ்நாட்டில் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்திய BMW குழுமத்தின் மூத்த தலைவர்களையும் முதலமைச்சர் சந்தித்தார். சந்திப்பின்போது, ஆட்டோமொடிவ் மற்றும் EV துறைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பை முதலமைச்சர் எடுத்துரைத்தார், மேலும் தமிழ்நாட்டின் மூலமாக இந்தியா முழுவதும் தொழிலை விரிவுப்படுத்த BMW நிறுவனத்தை அழைத்தார். தமிழ்நாட்டின் வலுவான EV உள்கட்டமைப்பையும் இந்தியாவில் தங்கள் விற்பனை அனுபவத்தையும் மேற்கோள் காட்டி BMW தமிழ்நாட்டுன் தொழில் செய்வதை மீண்டும் உறுதிப்படுத்தியது.