Chief Minister's advice to Coimbatore administrators at One-to-one meeting
சென்னை அறிவாலயத்தில் நடக்கும் உடன்பிறப்பே நிகழ்வில் திமுக நிர்வாகிகளை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தினமும் சந்தித்து வருகிறார். அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் அடங்கிய சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் கோயமுத்தூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, “கோவையில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளை நாம் கைப்பற்ற வேண்டும். வெற்றி பெறுவதற்கான அனைத்து உழைப்பையும் கொடுக்க வேண்டும்” என்று நிர்வாகிகள் முன்னிலையில் செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து முதலமைச்சர் விசாரித்த போது, ‘அதிமுக பிஎல்ஏ2 (BLA2)க்கள் யாருமே களத்துக்கு வருவதில்லை. வராமலே, இப்பணிகளை மேற்கொள்ளும் திமுகவை விமர்சித்து அரசியல் செய்கின்றனர்’ என்று நிர்வாகிகள் புகார் கூறினார்கள். அப்போது, “நுனிப்புல் மேய்வதுதான் அதிமுகவினரின் வேலை. அதைப்பற்றி கவலைபடாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்தங்கள்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்ததினார்
Follow Us