மலையாள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், ஓண்ம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் அன்பான மலையாள சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள். ஓணம் என்பது நமது திராவிட பாரம்பரியத்தை நமக்கு நினைவூட்டும் ஒரு பண்டிகை. நமது வரலாறும் போராட்டங்களும் பின்னிப்பிணைந்தவை. அதேபோல், நமது கொண்டாட்டங்கள் நீதி மற்றும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்துவதற்கான ஆர்வத்தை எதிரொலிக்கின்றன.

Advertisment

ஓணம் என்பது பூக்கள், விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, அனைவரும் ஒன்றாக வாழ்ந்து, சுயமரியாதை அனைவருக்கும் சமம் என்று நம்பிய ஒரு காலத்தின் மறுபிறப்பும் கூட. ஒரு தேசத்தின் செழிப்பு அனைவருடனும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும்போது மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதையும் இது நினைவூட்டுகிறது. இந்த ஓணம் நமது பிணைப்புகளை வலுப்படுத்தட்டும், ஒவ்வொரு குடும்பத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும், மேலும் சமமான, நீதியான மற்றும் கண்ணியமான சமூகத்தை ஒன்றாகக் கட்டியெழுப்ப நம்மை ஊக்குவிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மிலாடி நபிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலி,  ‘நபிகள் நாயகத்தின் பிறந்தநாளினை கொண்டாடிடும் அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகள்! உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையோடு நடத்துதல் என உலகத்துக்கு என்றென்றும் தேவையான நற்கருத்துகளை போதித்த உயர்ந்த உள்ளமாக திகழ்ந்தவர் அண்ணல் நபி அவர்கள். அவரது போதனைகளை பின்பற்றி வாழ்ந்திடும் இஸ்லாமிய உடன்பிறப்புகளின் உரிமைகளுக்கும், நலனுக்கும் என்றும் உழைத்திடும் அரசாக கழக அரசு ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும்போதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உங்களில் ஒருவராகவே இருந்து செயல்படும் அரசின் சார்பில், எனது அன்பார்ந்த மிலாது நபி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்,’ எனக் குறிப்பிட்டுளார்.