உடன் பிறப்பே நிகழ்வு மூலம் திமுக நிர்வாகிகளை தினமும் சந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று நடந்த நிகழ்வில் ஆலங்குளம், கன்னியாகுமரி, ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை சந்தித்து பேசும் போது, "எங்க அப்பா, 1967-லில் இருந்து திமுக உறுப்பினர் ( முத்துவேல்). இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. அண்ணா, கலைஞர் காலத்து அரசியல் பேசி திமுகவினரிடமும், ஏரியா மக்களியிடமும் கட்சியை வளர்த்து வருகிறார் தலைவர். எங்க அப்பாவுக்கு ஒரு ஆசை. உங்க கூட போட்டோ எடுக்க வேண்டும். அவரை கூட்டிட்டு வரவா தலைவரே?" எனக் கேட்க, நெகிழ்ந்துவிட்டார் ஸ்டாலின்.
"உடனே அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே அவரிடம் பேசி வரச் சொல்லுறேன்" என சொன்னார் முதலமைச்சர். மேலும், உடனே ஃபோன் போட்டு பேசவும் செய்தார்.தனது அப்பாவுடன் தலைவர் பேசுவதைக் கண்டு ‘இது போதும்’ எனக் கண் கலங்கினார் ஒன்றியச் செயலாளர் சிவக்குமார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/19/sta-2025-11-19-15-38-28.jpg)