இரண்டு நாள் பயணமாக குமரி மாவட்டத்தின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கவும் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச் சிலை வெள்ளி விழா நினைவு வளைவு மற்றும் நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சன் பூங்காவில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட குமரி கோமேதகம் ஆர்.பொன்னப்ப நாடார் அவர்களின் திரு உருவச் சிலை திறப்பதற்காகவும் இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவரை சட்டசபை பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களோடு கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் என திரண்டுவந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

அதனை ஏற்றுக்கொண்டு கன்னியாகுமரி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின். அவர் செல்கிற சாலை வழியோரங்களில் எல்லாம் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததோடு திரளான பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து வாகனம் மூலமாக கன்னியாகுமரி கிளம்பிவந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நெல்லை கே.டி.சி. நகரின் அருகே திரண்டு வந்த தொண்டர்களும் மக்களும் வரவேற்பு அளித்ததோடு நெல்லை மேற்கு மா.செ. ஆவுடையப்பன், மாநகர மா.செ. அப்துல் வகாப் ஆகியோரின் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

Advertisment

w

அதன்பின் நாகர்கோவிலை நோக்கி பயணித்த முதல்வர் ஸ்டாலினுக்கு வழியோராமான பனகுடியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கிரகாம்பெல் தலைமையிலான கட்சியினரும் பொதுமக்களும் ஆர்ப்பரித்த வரவேற்பளித்தனர். அதன்பின் கன்னியாகுமரி சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பெருமாள்புரத்தில் 7.85 கோடி செலவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 90 வீடுகளைத் திறந்துவைத்து முகாம் தமிழர்களுடன் கலந்துரையாடினார் முதல்வர் ஸ்டாலின். கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சியில் 1 கோடி 45 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நினைவு அலங்கார வளைவினைத் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் பேரவைத் தலைவர் அப்பாவு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ் குமார், திருமதி. தாரகை கத்பட், பிரின்ஸ் மற்றும் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆர். அழகுமீனா ஐ.ஏ.எஸ். மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட அரசு உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Advertisment