Chief Minister participates in Samathuva Pongal at the Secretariat Photograph: (pongal)
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாளான 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாள் (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல், அதனைத் தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ள சமத்துவ பொங்கல் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சென்னை மேயர் ப்ரியா மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் என பலரும் பங்கேற்றனர்.
Follow Us