சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3வது கூட்டம் இன்று (17-12-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “காலநிலை மாற்றத்துடைய விளைவுகளை நான் இப்போது கண்கூடாக பார்த்து வருகிறோம். டிட்வா புயலால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டது என்று பார்த்தோம். நம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாமல், தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறோம். எப்பவோ ஒரு தடவை, புயல் வெள்ளத்தை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம்  கடந்துவிட்டோம். அதை உணர்ந்துதான், மூன்று ஆண்டுகளுக்கு முன்னாடியே பேரிடர் தடுப்பு மற்றும் தகவலமைப்பு  உட்கட்டமைப்புகளை தொடங்கிட்டோம்.  

Advertisment

காலநிலை மாற்ற  ஆட்சிமன்ற குழு, பசுமை தமிழ்நாடு இயக்கம்,  தமிழ்நாடு ஈரநிலை இயக்கம், தமிழ்நாடு  காலநிலை மாற்ற இயக்கம்,  தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என முன்னாடியே செய்து வருகிறோம். இதனால் இந்தியாவுக்கே வழிகாட்டுகிற நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. கடந்த கூட்டத்தில் கூட உறுப்பினர்கள் பல்வேறு வழிகாட்டுதல்களை  வழங்கி இருந்தீர்கள். அதை அடிப்படையாக வைத்து கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காலநிலை  கல்வி அறிவு முன்னெடுப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டோம்.  அதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும்  திறமைமிகு 4000 பள்ளி ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.  மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த  பயிற்சிகள்  வழங்கப்பட இருக்கிறது.  அதுமட்டுமில்லாமல்,  பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த  ஆண்டுக்கு இரண்டு முறை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக  நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும்  குளிர்கால சிறப்பு முகாம்களை  இரண்டு நாள் முகாம்களாக பள்ளி கல்வித்துறை மூலமாக நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம். பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலைய குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

Advertisment

வேறு எந்த மாநிலத்தில் இல்லாத அளவுக்கு இவ்வளவு செய்திருக்கிற காரணத்தினால் தான் ஒன்றிய அரசு நம்மை பாராட்டி இருக்கிறார்கள். நிதி ஆயோக் வெளியிட்ட்ள்ள எஸ்டிஜி ரேங்கில் கிளைமேட் ஆக்‌ஷன் மற்றும் கிளீன் எனர்ஜி ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. உலக புகழ்பெற்ற பொருளாதார அறிஞர்களும் நமது திராவிட மாடல் வளர்ச்சியை பாராட்டுகிறார்கள். நம் அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண். இயற்கை வள பாதுகாப்புடன்  இணைந்த வளர்ச்சிதான் எதிர்கால  சந்ததிகளுக்கான உண்மையான வளர்ச்சியாக  இருக்க முடியும். கடந்த நான்கு  ஆண்டுகளில் நமது மாநிலத்தை பாதித்த  பேரிடர்களுக்கான நிவாரண நிதியா தமிழ்நாடு  அரசை கேட்டதில் வெறும் 17 விழுக்காடுதான்  ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.  எத்தனையோ  சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடி  இருக்கு வென்றிருக்கிறது. நாட்டுக்கே  வழிகாட்டி இருக்கிறது. அதுபோல இந்த காலநிலை  மாற்று சவால்களையும் எதிர்த்து தமிழ்நாடு  போராடும் தமிழ்நாடு வெல்லும்” என்று கூறினார்.