Advertisment

“மனைவி சொன்னால் கேட்க வேண்டும்” - அறிவுரை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!

mkmarriage

Chief Minister M.K. Stalin says The reason for my success is my wife

சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடி மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (18-12-25) திறந்து வைத்தார். அதன் பின்னர், 17 இணையர்களுக்கு அவர் திருமணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து, ரூ.17.47 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பெரியார் நகர் அமுதம் அங்காடியை அவரி திறந்து வைத்தார்.

Advertisment

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கொளத்தூர் வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும், உற்சாகம் வந்துவிடும், புத்துணர்ச்சி வந்துவிடும். கொளத்தூர் தொகுதியை பார்க்கும் போது அமைச்சர்களுக்கே பொறாமை உள்ளது. கெட்ட எண்ணத்தில் அந்த பொறாமை இல்லை, நல்ல எண்ணத்தில் தான் உள்ளது. கொளத்தூர் என்றாலே சாதனை அல்லது ஸ்டாலின் என சொல்லும் அளவுக்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. கொளத்தூர் மட்டுமல்ல எல்லா தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்பதை முன்னிறுத்தி பணியாற்றி வருகிறோம். சட்ட சிக்கல்களை களைந்து வண்ண மீன் விற்பனை மையத்தை செயல்படுத்தினோம். 

Advertisment

கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்துவிடுவேன். 10 நாட்களுக்கு ஒரு முறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும். கொளத்தூர் மக்கள் அளிக்கும் வரவேற்பில்தான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். மேயர் முதல் முதல்வர் வரை எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, செல்லப் பிள்ளையாக, நல்ல பிள்ளையாக இருப்பேன். கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனை தரத்தை உயர்த்த திட்டமிட்டு பெரிய மருத்துவமனையாக உருவாக்கியுள்ளோம். ஸ்டான்லியை விட ராஜீவ்காந்தி மருத்துவமனையை விட பெரிய மருத்துவமனையாக பெரியார் மருத்துவமனை விளங்குகிறது. பல துறைகளுடன் கலந்து பேசி ஒழுங்குபடுத்தி வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தக மையம் உருவாக்கினோம்.

இல்வாழ்க்கை பயணத்தை தொடங்கக்கூடிய ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நம்முடைய மணமக்களுக்கு உருவாக்கி  இருக்கிறோம். குறிப்பாக, நான் ஆட்சி வந்ததுக்கு பிறகு பெண்களுக்குதான் அதிகமான திட்டங்களைம் சாதனைகளை படைத்து வருகிறோம். பெண்களை படிக்க வைத்தால், பெண்களை முன்னேற்றினால் அந்த குடும்பம் வளர்ச்சியடையும் என்ற அடிப்படையில் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக்கூடியவர்கள். இன்னும் சொல்ல போனால், ஒரு ஆணினுடைய வெற்றிக்குப் பின்னால் பெண் தான் இருக்கிறார் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. என்னுடைய வெற்றிக்கு பின்னால் என்னுடைய மனைவி தான் இருக்கிறார். நான் மட்டுமல்ல, சேகர்பாபுவாக இருந்தாலும் சரி, நேருவாக இருந்தாலும் சரி, இங்கு இருக்கும் நீங்களாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் அது தான். அதனால், மனைவி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மணமகன்களிடம் கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறினார். ” என்று கூறினார். 

mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe