சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா இன்று (18-01-26) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, “மனித இனம் தன்னுடைய சிந்தனைகளையும், தான் சேர்த்த அறிவு செல்வத்தை பிறருக்கும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கக்கூடிய கருவி தான் புத்தகம். வாசிப்பு மூலமாக தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு வீட்டையும் அறிவு பர வேண்டும் என்று ஏராளமான முன்னெடுப்புகளை நம் திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம்.

Advertisment

அதில் முக்கியமானது தான் புத்தக திருவிழாக்கள். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் என எல்லோருக்குமான உறவு பாலமாக இந்த புத்தக திருவிழாவை சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த நான்காவது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. 102 நாடுகளோடு பங்கேற்போடு சிந்தனையுடைய ஊற்றாக, பண்பாட்டின் கருவூலமாக, அறிவு பரிமாற்றத்தின் உடைய அடித்தளமாக இந்த பன்னாட்டு புத்தகத்தில் விழாவை நிறைவடைந்ததில் தமிழ்நாடு முதலமைச்சராக மட்டுமில்லாமல்  ஒரு புத்தகத்தினுடைய ஆர்வலராகவும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

Advertisment

இந்த புத்தக திருவிழாவில் மொழி பெயர்ப்புகள், பதிப்புரை பரிமாற்றம் ஆகியவற்றில் மிகுந்த முக்கியத்துவம் செலுத்தி இருக்கிறோம். இந்த புத்தக திருவிழாவில், நிறைய அறிவார்ந்த  இக்காலத்துக்கு அவசியமான உரையாளர்களும்  ஏற்பாடு செய்யப்பட்டதை பார்த்து நான்  பெருமைப்பட்டேன். நம் மண்ணின் சிந்தனைகளும் எழுத்துகளும் உலகம் முழுவதும் பரவ வேண்டும். உலகின் உயரிய சிந்தனைகள் நம் மக்களிடம் வந்து அடைய வேண்டும் என்ற கனவு இந்த நிகழ்ச்சியால் நனவாகியுள்ளது. இலக்கியத்துக்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் நரமும், இளங்கோவடிகளின்  காப்பியமும், பாரதியின் கவிதைகளும்,  பாரதிதாசனின் கருத்துக்களும் உலகமெல்லாம்  ஒழிக்க வேண்டும். அதே வேளையில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் இலக்கிய படைப்புகள் எளிய தமிழில் நம் கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். செம்மொழியான  தமிழின் சங்க இலக்கியங்கள் முதல் நவீன  இலக்கியங்கள் வரை உலக மக்களுக்கு சென்று சேர வேண்டும்.

இந்த நிலப்பரப்பில் இருந்து எவ்வளவு ஆழமான பரந்த சிந்தனை கொண்ட கருத்துக்கள், இலக்கிய இலக்கண மரபுகள் உருவாகி இருக்கிறது என்று நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் அல்ல, அது உலக  மக்களை இணைக்கக்கூடிய பாலம். புத்தகங்கள் வெறும் பேப்பர் அல்ல, அவை ஒரு தலைமுறை மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லக்கூடிய அறிவு சொத்து. புத்தகத்தை திறப்பவர் உலகத்தின் ஜன்னலை திறக்கிறார். ஒரு புத்தகத்தை வாசிப்பவர் ஆயிரம் மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறார். நீங்கள் வாசிக்கிற ஒவ்வொரு பக்கமும் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவார்ந்த சமூகத்தை படைப்போம், உலகத் தமிழை உலகத்துக்கும் கொண்டு சேர்ப்போம் என்று சொல்வோம். அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான். அப்போது இதைவிட பெரிய அளவில் உலகத்தோட கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில்  இந்த பன்னாட்டு திருவிழாவை நிச்சயமாக நடத்துவோம். தமிழ்நாடு முழுவதும் பல பிரம்மாண்ட உலகங்களை அறிவு கோயில்களாக  எழுப்புவோம், அறிவுத் தீ வளர்ப்போம், வெல்வோம்” என்று கூறினார். 

Advertisment