Chief Minister M.K. Stalin says Tamil Nadu has been affected by US tariffs
அமெரிக்காவின் வரி விதிப்பினால் தமிழகத்தில் ஏற்றுமதி துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்க வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலூர், இராணிப்பேட்டை & திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது.இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்த வரிச் சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தமிழ்நாடு இந்தியாவின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. அமெரிக்காவின் வரிகள் இந்த அடித்தளத்தை கடுமையாக பாதித்து, நமது தொழில்துறை பிராந்தியங்களில் உற்பத்தி, ஆர்டர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீர்குலைத்து வருகின்றன. எனவே, தமிழ்நாட்டின் ஏற்றுமதியாளர்களையும் இந்தியாவின் உலகளாவிய உற்பத்தி வலிமையையும் பாதுகாக்க உடனடி இருதரப்பு தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us