கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ‘TN RISING’ எனும் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (25-11-25) நடைபெற்றது. இந்த மாநாட்டில், ரூ.43.844 கோடி முதலீட்டில் 158 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Advertisment

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தென்னிந்தியாவின் மான்செஸ்டராக கோவை மாட்டம் விளங்குகிறது. 15 முறைக்கு மேல் இந்த கோவைக்கு வந்திருக்கிறேன். கோவைக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. அதுபோல் கோவை மக்களும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு ஏராளமான முதலீடுகளைப் பெற்றுள்ளது. திமுக ஆட்சியும், தமிழ்நாட்டு வளர்ச்சியும் பிரிக்க  முடியாதது. ஏனென்றால், அறிவு தரத்திலும் உழைப்பிலும் சாதனை படைப்பதிலும் உலக நாடுகளுக்கு இணையாக இந்த தமிழ்நாடு இருக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைய வேண்டும் என்ற வேட்கை எங்களுக்குள் இருப்பதால் இருப்பதால் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் 25 ஆண்டுகள் அட்வான்சாக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

Advertisment

ஆட்சி மாற்றத்தால் சில தொய்வுகள் ஏற்பட்டாலும் தமிழ்நாடு என்றும் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சியே தமிழக அரசின் நோக்கம். 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 809 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ளனர். இதனால், 36 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80%க்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுடைய வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அரசியல் காரணங்களுக்கு தவறான தகவல்களை பரப்புகிறார்கள். திமுக ஆட்சிக்கு வரும் 62,000க்கும் மேல் நிறுவனங்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 72,000ஆக உயர்ந்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் நம் ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகளை பார்த்து எதிர்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். மாநிலங்கள் மட்டுமல்லாது வியட்நாம், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுடன் போட்டிப்போட்டு தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 12,663 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

Advertisment