சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், ‘தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று இன்று (06-03-26) நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இன்றைய நிகழ்ச்சி போல் என்றைக்கும் நடந்திருக்காது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தை மட்டுமல்ல எதிர்கால தமிழ்நாட்டையும் மனதில் வைத்து இந்த, ‘தமிழ்நாடு - 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியை உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் அமைச்சர் பெருமக்கள், துறையினுடைய அதிகாரிகள், கடல்நிலை அரசு ஊழியர்கள் வரை அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அதன் பயன்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் காட்டி வரக்கூடிய அர்ப்பணிப்பு உணர்வும், அயராத உழைப்பும், நிர்வாக திறனும் தமிழ்நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உயர்த்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கக்கூடிய மகிழ்ச்சிதான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம்.
சொன்னதை மட்டுமல்ல சொல்லாத பல முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறோம். ஆட்சிக்கு வரும்போது இவ்வளவு திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. ஆனால் அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றி காட்ட வேண்டும் என்ற கனவும் எனக்கு இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான என்னுடைய கனவுகளை பெரும்பாலும் நிறைவேற்றி விட்டோம் என்பதை நிகழ்ச்சி மூலமாக அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நம் திட்டங்களால் பயனடையாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒவ்வொரு தரப்புக்கும் பார்த்து பார்த்து செய்து வருகிறோம். இந்த திட்டங்கள் எல்லாம் போதுமான என்னிடம் கேட்டால், போதாது இன்னும் நிறைய சாதனைகளை செய்திருக்க வேண்டும் என்று தான் சொல்வேன். அந்த சாதனைகளை செய்திருக்கலாம், அரசியல் ரீதியாக சில நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள் இப்படி நிறைய முட்டுக்கட்டைகள் இருக்கிறது. அதற்காக அந்த காரணங்களை சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறவன் நான் இல்லை.
சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் அதை தன்வசப்படுத்தி செல்வதுதான் என்னுடைய ஸ்டைல். பெரிதினும் பெரிது கேள் என்ற அடிப்படையில் நெகட்டிவ்களையும் பாசிட்டிவாக மாற்றி இந்த சாதனைகளை செய்திருக்கிறோம். இதுதான் திராவிட மாடலின் ஸ்டைல். அதற்காக இதுவே போதும் என்று திருப்தி அடைய மாட்டோம். உழைக்கும் வரை உதிக்கும் ஞாயிறு என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொல்வார். நான் தினந்தோறும் உழைக்கிறேன், உழைத்துக்கொண்டே இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். இது மட்டும்தான் என்னுடைய சீக்ரட், சீக்ரட் ஆஃப் சக்சஸ். என்னுடைய அரசு செய்திருக்கும் சாதனைகளை நம்பி நான் உறுதியாக சொல்கிறேன். அடுத்து அமையப்போவது திராவிட மாடல் ஆட்சிதான். எங்களுடைய சாதனை அடுத்த கட்டமாக திராவிட மாடல் 2.0 ஆட்சி இருக்கும். அதற்கான ட்ரைலர் தான் இந்த நிகழ்ச்சி. அடுத்த ஐந்து ஆண்டு காலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? நாம் எந்த பாதையில் டிராவல் பண்ணனும்? என்பதற்காக ஒரு ப்ளூ பிரிண்ட் தயாரித்து இன்றைக்கு அதை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/mkst2-2026-03-06-17-43-05.jpg)