Advertisment

“பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

mkstalinoriginal2

Chief Minister M.K. Stalin proudly says Tamil Nadu's achievement of pushing the big states behind

மற்ற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி ஜிஎஸ்டிபி (GSDP) வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வானுயர் ஜிஎஸ்டிபி (GSDP) வளர்ச்சி விகிதம், பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை. பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை. இருந்தும் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல். கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான், சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி.

Advertisment

2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம், மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி. நம்மோடு ஒப்பிடத்தக்க வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம், தமிழ்நாட்டுக்கே சொந்தம். தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி. 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன், இது உறுதி” எனப் பதிவிட்டுள்ளார். 

mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe