Chief Minister M.K. Stalin has become a motherhood to children who have lost their parents
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்- வசந்தி தம்பதியினர் உயிரிழந்தனர். அவர்களது 4 குழந்தைகளும் செய்வதறியாமல் திகைத்தனர். அடக்கம் செய்ய உதவியின்றித் தவித்தனர்.
இந்த செய்தி தினப்பத்திரிகையில் வெளிவந்ததைப் பார்த்துவிட்டு, உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு அந்த குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, உடனே தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்தது.
மேலும், கவலையில் இருந்த குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு, “கவலைப்படாதீர்கள். தைரியாக இருங்கள்” என்று ஆறுதல் படுத்தினார் . அதுமட்டுமல்லாமல், “இந்த 4 குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்” என்றும் கூறியுள்ளார். இப்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுமானவராக மாறியிருக்கிறார்.
Follow Us