chief Minister M.K. Stalin answered about teachers issue in the assembly
சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (22-01-26) தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி, ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ அரசு ஊழியர்கள் போராடி கொண்டிருப்பதை மிகுந்த கவலையோடு வருத்தத்தோடு அக்கறையோடு அதிமுக உறுப்பினர் தங்கமணி குறிப்பிட்டிருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை? திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரை அரசு ஊழியர்கள் போராடுவது அவர்களது உரிமை. உரிமையோடு போராடக்கூடிய போராட்டய்த்தை கூட முடிக்க வேண்டும், தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு தொடர்ந்து அமைச்சர்களோடு அழைத்து அழைத்து பேசிருக்கிறேன். பலமுறை பேசியும் அது முழு அளவுக்கு தீர்க்கப்படவில்லை என்றாலும் 95, 96 சதவீதம் தீர்த்து வைத்திருக்கிறோம். ஆனால், நாங்கள் டெஸ்மா எஸ்மா சட்டத்தை கொண்டு வரவில்லை. இரவோடு இரவாக கைது செய்யவில்லை. அவர்களை சிறையில் அடைக்கவில்லை. இதெல்லாம் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது. எங்கள் ஆட்சியில் இல்லை.
நாங்கள் அரசு ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர், முதல்வராக இருந்தபோது அரசு ஊழியர்கள் எந்தெந்த வகையில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கொச்சைப்படுத்தி பேசியதெல்லாம் இந்த நாடு மறந்துவிடாது. 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்திருக்கிறோம். அரசு சங்கத்தை சார்ந்திருக்கூடிய பொறுப்பாளர்கள் எல்லாம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கோட்டையில் உள்ள முதல்வர் அறைக்கு வந்து எனக்கு இனிப்பு ஊட்டினார்கள். அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சி உங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் எதையும் செய்யவில்லை என்று சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் எதையும் செய்யவில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
வாக்குறுதியை நான் முழுவதும் நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்லவில்லை, இன்னும் ஓரிரு சதவீதம் இருக்கிறது. சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்ள் போராடி கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசிக் கொண்டிருக்கிறோம். அதே போல் பகுதிநேர ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், போராட்டம் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களை எல்லாம் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அவர்களை எல்லாம் அழைத்து பேசி பேசி அவர்களின் கோரிக்கையை எந்தளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பதை சிந்துத்து உறுதியாக நிறைவேற்றப்படுவோம். வேற எந்த கவலையும் பட வேண்டாம். அடுத்த ஆட்சி, திராவிட மாடல் ஆட்சிதான் என்பதை உறுதி” என்று பேசினார்.
Follow Us