சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வழக்கமான நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்யவும், மருத்துவ பரிசோதனைக்காகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ நாகநாதன் ஆகியோர் வந்துள்ளனர்.