சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட ரயில்வே பீடர் சாலையில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு 1.41 ஏக்கர் பரப்பளவில் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில்  இரண்டு தளங்களுடன் 24 அறைகள், உணவகம், கூட்டரங்கம், பேவர் பிளாக் வசதி, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் காற்றோட்ட வசதியுடன் கூடிய ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் முடிவற்று திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்தது.

Advertisment

இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் குத்து விளக்கேற்றி வரவேற்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் பிரபுதாஸ், மண்டல கணக்கர் சிவதானு, மேலாளர் பைசல் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.