Advertisment

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியேற்பு!

mhc-cj-SUSHRUT-ARVIND-DHARMADHIKARI-oath
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நேற்று (05.03.2026) ஓய்வு பெற்றார். முன்னதாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்து வந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரைத்திருந்தது. 
Advertisment
இதனையடுத்து, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இன்று (06.03.2026) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தலைமை நீதிபதிக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். 
Advertisment
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முருகாணந்தம், துணைச் சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், உள்துறை செயலாளர் தீரஜ்குமார் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசியப் பாடலான வந்தே மாதரம், தேசிய கீதமான ஜன கன மன அதனைத் தொடர்ந்து நீராருங் கடலுடுத்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
LOK BHAVAN RN RAVI S.A. DHARMADHIKARI Chief Justice oath ceremony tamil thai valthu indian national anthem Vande Mataram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe